சசிகுமார் விகடன் பதிப்பு பொன்னியின் செல்வன் பக்கத்துல ரொம்ப நேரமா நிண்ணுக்குனு யார் வந்து பக்கத்துல நிண்ணாலும் போட்டோவுக்கு சிரிச்சுக்குனு இருந்தாரு. இந்தக் கடைல பாபா ராம்தேவ் தமிழ்ல பேசினார். மத்த எந்தக் கடைலயும் இப்படி பதாகை வெச்சு தலைப்ப அடையாளம் காட்டலை. சின்ன அறைல வாழ்நாளக் கழிச்ச பத்திரிகையாளர், நெனச்சாலே பிரமிப்பாத்தான் இருக்கு. க்ளாசிக் கலெக்ஷன்னு சொல்றாங்க, சல்தாஹை! நல்ல ஏற்பாடு. ஆளுங்கள தேடிப்புடிச்சு உக்கார வெச்சு கலைக்களஞ்சியம் விக்றாங்க. நம்ம பழைய நண்பர் பிரசன்னாவத் தேடுனேன், அவரு அப்ப கடைல இல்லை. செம கேம்பெய்ன். வருஷாவருஷம் நா.முத்துக்குமாரும் ப்ளக்சுல சிரிச்சுர்ராரு. இங்க பெயர்ப் பலகைல ‘ச்’சலை. ஆனா, இங்க சரியா ‘ப்’பிட்டாய்ங்க. பிரிச்சு வெக்றதுக்கெல்லாம் நேரமில்லை. 3300ரூவா, 3400ரூவா, அப்டியே பண்டலோட தூக்கிக்கினு போய்க்கினே இருக்கணும். இந்த ரூட் மேப் ஒரு காப்பி வாங்கி கைல வெச்சாத்தான் ஆச்சுன்னு அடம் புடிச்சு என்னோட பொண்ணு வாங்கினால்ல. மொத ரவுண்ட் பர்சேஸ். பொன்னியின் செல்வனுக்கு மதிப்பு குடுத்து வாங்கியிருக்கேன்.
சென்னையில் ஓரளவிற்கு நெரிசலான பகுதியில் இருக்கும் எனது ஒரு படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்பை (1BHK) விற்பது குறித்து மும்பை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘அபி பேச்னேக்கா? தூ பாகல் ஹை க்யா? வெய்ட் கரோ பாபா, கோயி பில்டர் அப்ரோச் கரேகா’ (இப்பொழுதே விற்கவேண்டுமா? உனக்குப் பைத்தியமா? கொஞ்சம் பொறு. யாரேனும் கட்டுமான நிறுவனத்தார் தொடர்புகொள்வார்). இந்த உரையாடல் எங்களிடையே நடந்தபோது நான் த லாஸ்ட் மேன் இன் டவர் படித்திருக்கவில்லை. கதையின் மையக் கரு அதுதான். விஷ்ராம் சொசைட்டி (டவர் ஏ) வாக்கோலா சாட்ண்டா க்ரூஸ் (கிழக்கு) மும்பை-4000055 இன்றைக்கு மிகப் பழைய கட்டடமாக இருக்கும் அதன் மீது மும்பையின் பிரபல கட்டுமான நிறுவனத்தார்களின் பார்வை படுகின்றது. குடியிருப்புகளின் சொந்தக்காரர்களை அவர்கள் அணுகுகின்றார்கள். வீட்டின் மேலிருக்கும் மனச்சாய்வால் அந்தப் பழைய கட்டடத்தில் குடியிருப்பவர்கள் நிறுவனத்தாரின் முன்வைப்பை ஏற்க மறுக்கிறார்கள். நிறுவனத்தார் விடுவதாக இல்லை. ஆடுற மாட்டை ஆடிக்கற பாடுற மாட்டைப் பாடிக் கறவாக ஒவ்வொரு குடியிருப்பின் சொந்தக்காருடைய தேவைகள், குறைபாடுகள் ரகசியமாக ஆராயப்படுகின்றன...